மணவாட்டி சபையே மணவாளன் பிரியமே

 

 

     மணவாட்டி சபையே மணவாளன் பிரியமே

     உந்தன் நடுவில் உலாவும் இயேசுவை

     உந்தன் கண்கள் காணவேண்டுமே

 

பொன் குத்து விளக்காம் சபைநடுவில்

பொற்கச்சை நிலையங்கி தரித்தவராய்

சபையின் தலையாய் உலாவுகிறார்

சாஷ்டாங்கமாய் நாம் ஆராதிப்போம்                 - மணவாட்டி சபையே

 

பரிசுத்தர் சங்கமாம் சபைநடுவில்

பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே

சேனைகளின் கர்த்தர் உலாவுகிறார்

கரங்களை உயர்த்திநாம் ஆராதிப்போம் - மணவாட்டி சபையே

 

வேலியடைத்த தோட்டமாம் சபைநடுவில்

என் பிரியமே ரூபவதி என்றழைக்கும்

ஆத்தும நேசர் உலாவுகிறார்

அன்புகூர்ந்து நாம் ஆராதிப்போம்           - மணவாட்டி சபையே